search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகநாத சுவாமி"

    நாகநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா தொடங்கியது
    திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே நந்தி கோவில் தெருவில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோவிலில் மாசி மக திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் இன்று(திங்கட்கிழமை) கற்பக விருட்சம், காமதேனு வாகனத்திலும், நாளை(செவ்வாய்க்கிழமை) பூத வாகனம், கமல வாகனத்திலும், 13-ந் தேதி கைலாச பர்வதம், அன்ன வாகனத்திலும், 14-ந் தேதி இடப வாகனத்திலும், 15-ந் தேதி யானை வாகனம், பூப் பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெறுகிறது. 16-ந்தேதி நந்தி வாகனம், சிம்ம வாகனத்திலும், 17-ந் தேதி குதிரை வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 18-ந் தேதி காலை 9.55 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 19-ந் தேதி மாசி மகத்தன்று காலை ஸ்ரீநடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

    அன்று இடப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர். 20-ந் தேதி சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து காலை நாக கன்னிகள், சாரமா முனிவர், நாகநாதரை முட்செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், அன்று இரவு விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×